ந்தூர்

டந்து முடிந்த காலாண்டில் ஸ்டேட் வங்கி மினிமம் பேலன்ஸ் வைக்காத 388 அக்கவுண்டுகளுக்கு அபராதமாக ரூ. 235 கோடி வசூலித்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்கள் குறைந்த பட்சம் ரூ.5000 கணக்கில் வைத்திருக்க வேண்டும் எனவும்,  அப்படி வைக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவித்திருந்தது.   இதுவரை வசூலிக்கப்பட்ட அபராதம் எவ்வளவு என தகவல் அறியும் சட்டத்தின் கீழ் சந்திரசேகர் கவுட் என்னும் சமூக ஆர்வலர் கேட்டதற்கு வங்கி பதில் அளித்துள்ளது.

அந்த பதிலில் காணப்படுவதாவது :

”சென்ற ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை குறைந்த பட்ச தொகைக்கும் குறைவாக பணம் வைத்திருந்த மொத்த அக்கவுண்டுகளின் எண்ணிக்கை 388.74 லட்சம் ஆகும்.   அந்த வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை மொத்தம் ரூ. 235.06 கோடி ஆகும்.  இந்தப் பணம் அந்த வாடிக்கையாளர்களின் அக்கவுண்டில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.” என கூறப்பட்டுள்ளது.

சந்திரசேகர் மேற்கூறிய தகவலை தெரிவித்ததோடு,  அபராதம் வசூலிக்கப்பட்ட அக்கவுண்டுகள் எத்தகைய அக்கவுண்டுகள் என்பதை, அதாவது சேவிங்க்ஸ் எவ்வளவு, மற்றவை எவ்வளவு என்பதை வங்கி தெரிவிக்கவில்லை எனக் கூறி உள்ளார்.

மேலும் ஏழை மக்களின் நலன் கருதி இந்த அபராதம் வசுலிப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் வங்கிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.