ஸ்லாமாபாத்

பாகிஸ்தான் ஸ்டேட் வங்கியில் வாரத்துக்கு ரூ.3000 மட்டுமே எடுக்க வேண்டும் என கட்டுப்பாடு  விதிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் தற்போது ராணுவத்தினர் ஏராளமாக குவிக்கப்பட்டுள்ளனர்.   அமர்நாத் யாத்திரை இடையில் நிறுத்தப்பட்டு அனைத்து யாத்திரிகர்களும் திருப்பி அனுப்பப் பட்டுள்ளனர்.   அங்குள்ள சுற்றுலாப்பயணிகளும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

அங்குள்ள கட்சித் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.   நேற்று தேசிய பாதுகாப்பு ஆலோசர் அஜித் தோவல்  மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்து இது குறித்து விவாதித்ததாக தகவல்கள் கூறின.

இந்நிலையில் பாகிஸ்தான் ஸ்டேட் வங்கி ஒரு புதிய உத்தரவை வெளியிடுள்ளது.  அந்த உத்தரவில், “காஷ்மீர் பிரச்சினையையொட்டி பாகிஸ்தான் அரசின் ஆணைக்கிணங்க தனி மனிதர் வாரத்துக்கு ரூ.3000 மட்டுமே வங்கிக் கணக்கில் இருந்து எடுக்கப்பட அனுமதிக்கப்படுவர்” என அறிவித்துள்ளது.