தமிழகத்தில் நடைபெற்ற 3 தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை பெற்று  வெற்றி உறுதியானது.
புதுவையில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி வெற்றிபெற்றுள்ளார்.
தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றன.
அரவக்குறிச்சியில் பதிவான வாக்குகள் கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியிலும்,
தஞ்சாவூர் தொகுதியில் பதிவானவை குந்தவை நாச்சியார் அரசு பெண்கள் கலைக் கல்லூரியிலும், திருப்பரங்குன்றம் தொகுதியில் பதிவான வாக்குகள் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியிலும் வைத்து எண்ணப்பட்டு வருகின்றன.
வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது.
இதுவரை நடைபெற்றுள்ள  3 தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை வகித்து வருகிறது.
அரவக்குறிச்சியில் 7வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி சுமார் 10,000 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்…
senthil-balaji
அரவக்குறிச்சியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஏராளமான முகவர்கள் குவிந்ததால், முகவர்களுக்கு உட்கார இடம் இல்லை என்று கூறி தேமுதிக, பாஜக வேட்பாளர்கள் போராட்டம் நடத்தியதால் வாக்கு எண்ணிக்கை பணியில் தாமதம் ஏற்பட்டது.
திருப்பரங்குன்றம் தொகுதியில் 11வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ்  சுமார் 19,000 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்…
ak-bose
தஞ்சாவூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி வெற்றிபெற்றார்.
rangasamy