சென்னை:
புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, போர்க்கால அடிப்படையில், உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதிகள் அளிக்க, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் விஷயத்தில், மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கை குறித்து, அறிக்கை தாக்கல் செய்ய, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இவ்வழக்கு, மீண்டும் டிவிஷன் பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா அடங்கிய, டிவிஷன் பெஞ்ச், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும், போதிய உணவு, குடிநீர், தங்கும் வசதி, மருத்துவ வசதி அளிக்க வேண்டிய கடமை, மாநில அரசுக்கு உள்ளது. அவர்களிடம் வேலை வாங்கி விட்டு, நன்றி மறக்கக் கூடாது.எனவே, உணவு, தங்குமிடம், மருத்துவ வசதி கிடைக்காத புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு, போர்க்கால அடிப்படையில் உதவிகளை வழங்கும்படி, அரசுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து விசாரணையை, வரும், 8ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.