திருவனந்தபுரம்:

மாடுகள் இசைச்சிக்காக விற்பனை செய்யப்படுவதற்கு தடை விதித்துள்ள மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக, மாநில முதல்வர்கள் கூட்டத்தை கூட்ட இருப்பதாக கேரள முதல்வர் பிரனாயி விஜயன் கூறியுள்ளார்.

ஐஐடியில்  மாட்டுகறி விழா நடத்தியதற்காக கேரள மாணவர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த முதல்வர் பிரனாயி விஜயன், இதுதொடர்பாக கேரள சட்டசபை விரைவில் கூட்டி விவாதிக்கப்படும் என்றும் கூறினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசி கேரள முதல்வர்,  மத்திய அரசு உத்தரவு தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றும்,  இந்த கூட்டம் விரைவில் நடக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

மேலும், மத்திய அரசின் மாடுகள் விவகாரம் குறித்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வோம் என்று கூறினார்.

இறைச்சி மாடுகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலாவுடன் ஆலோசனை நடத்திய பின்னர் சிறப்பு சட்டசபை தொடரை கூட்டுவது குறித்து முடிவு செய்யப்படும்.

புது விதிமுறைகளை மாநில அரசு ஏற்று கொள்ளாது. இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. மத்திய அரசின் இந்த உத்தரவு மாநில உரிமைகளுக்கு எதிரானது. கால்நடை சந்தையில் மாடு களை விற்பவர்களும் வாங்குபவர்களும் சான்றிதழ் வாங்குவது என்பது சாத்தியமில்லை. விற்பனையும் சாத்தியமில்லை என்றார்.

இதுபோன்ற  உத்தரவை பிறப்பிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதா என்பதை ஆராய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.