‘காமராஜர் பிறந்த தினம்’: சிறப்பாக கொண்டாட பள்ளிகளுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை
சென்னை:
‘காமராஜர் பிறந்த தினத்தை கல்வி வளர்ச்சி நாளாக சிறப்பாக கொண்டாட பள்ளிகளுக்கு தமிழக கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
இந்த சுற்றிக்கையை, பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் கல்விக்கண் திறந்த காமராஜரின் பிறந்தநாள் நாள் (ஜூலை 15ந்தேதி) அரசு விழாவாக கொண்டா டப்படுகிறது. இந்த நிலையில், அவரது பிறந்தநாளன்று கல்விக்கூடங்கள் திறந்து, கல்வி வளர்ச்சி நாளாக சிறப்பாக கொண்டாடும்படி தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.
காமராஜர் பிறந்தநாளை கடந்த 2006-ம் ஆண்டு முதல் கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டு வருகிறது. காமராஜரை போற்றும் வகையில் பள்ளி மாணவ மாணவிகளிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
இந்த வருடம் காமராஜர் பிறந்தநாள் ஞாயிற்றுக்கிழமை வருவதால், அன்றைய தினம் விடுமுறை என்பதால், காமராஜர் பிறந்தநாள் விழா பள்ளிகளில் கொண்டாடப்படுமா என்று கேள்வி எழுந்தது
இநத நிலையில் விடுமுறை நாள் என்றாலும்கூட, காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக பள்ளிகளில் கொண்டாட வேண்டும் என்று அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், தனியார் பள்ளி முதல்வர்களுக்கும் முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் ஒரு சுற்றறிக்கை தமிழக கல்வித்துறையால் அனுப்பட்டு உள்ளது.
அந்த சுற்றிக்கையில், காமராஜர் பிறந்த நாள் ஜூலை 15-ந்தேதி (நாளை) வருகிறது. இந்த நாளை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும், முதல்வர்களும் அன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடவேண்டும். இது தொடர்பாக நிகழ்ச்சிகள் நடத்தவேண்டும். சிறந்த பள்ளிகள் தேர்ந்து எடுக்கப்பட்டு அந்த பள்ளிகளில் உள் கட்டமைப்பு வசதி ஏற்படுத்த பரிசு தொகை வழங்கிட பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.56 லட்சமும், தொடக்க கல்வித்துறைக்கு ரூ.24 லட்சமும் ஆக மொத்தம் ரூ.80 லட்சத்துக்கு நிர்வாக அனுமதி வழங்கப்படுகிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
நாளை காமராஜர் பிறந்த தின நிகழ்ச்சி பள்ளிகளில் கொண்டாடப்பட இருப்பதால், அரசு பள்ளி களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு நாளை பள்ளிகள் நடைபெறவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அதேவேளையில் பல தனியார் பள்ளிகள் இன்றே காமராஜர் பிறந்தநாளை கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.