டில்லி

னைத்து மாநிலங்களுக்கும் ஏற்கனவே பதிவான நிலப் பத்திரங்களுடன் ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

வங்கி கணக்குகள், ரேஷன் கார்டுகள், எரிவாயு இணைப்புக்கள் போன்ற பலவற்றிற்கும் ஆதார் எண் அவசியம் இணைக்க வேண்டும் என உத்தரவு உள்ளது.  அதன் பின் இனிமேல் பதிவு செய்யப்படும் அனைத்து சொத்துப் பத்திரங்களுடன் ஆதார் எண்ணும் பதிய வேண்டும் என உத்தரவு வந்தது.

தற்போது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து சொத்து பத்திரங்களுடனும் ஆதார் எண் இணைக்கப்படவேண்டும் என மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

இந்த அறிக்கையின் படி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகிய இடங்களில் பதியப்பட்டுள்ள அனைத்து சொத்துப் பத்திரங்களுடன் ஆதார் எண் வரும் ஆகஸ்ட் 17க்குள் இணைக்கப்படவேண்டும் எனவும், அப்படி செய்யப்படாத சொத்துக்கள் பினாமி சொத்துக்களாக கருதப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

.