எதியோப்பியா : அவசரநிலை அறிவிப்பு

ட்டிஸ் அபாபா

தியோப்பிய நாட்டில் பிரதமர் ராஜினாமா செய்ததை அடுத்து அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்காவில் உள்ள எதியோப்பியா நாட்டில் கடந்த 2012ஆம் ஆண்டு ஐலிமரியம் தேசாலென் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.   கடந்த மூன்று ஆண்டுகளாக அவரது ஆட்சிக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.     அவரத் ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி சரியாக இல்லை எனவும்,  அரசு சாதாரண மக்களுக்கு எவ்வித நன்மையும் செய்யவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு வந்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை பிரதமர் ஐலிமரியம் தேசாலென் தனது பதவியை ராஜினாமா செய்தார்.    புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் தற்காலிக பிரதமராக இருப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.  தற்போது, எதியோப்பியா நாடில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் அரசு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.     இந்த முடிவு அமைச்சரவையில் நடந்த ஆலோசனையில் எடுக்கப்படுள்ளதாக தெரிய வந்துள்ளது.