Random image

பெண்களை கடத்துவதாக கூறிய பாஜக எம்எல்ஏவுக்கு மகளிர் ஆணையம் நோட்டிஸ்

மும்பை

தொண்டர்களுக்காக பெண்களை கடத்தப் போவதாக கூறிய பாஜக சட்டப்பேரவை உறுப்பினருக்கு மகளிர் ஆணையம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் காட்கோபர் பகுதியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி திருவிழா நடந்தது.  அந்த விழாவில் பேசிய பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ராம் கதம்  தனது தொண்டர்கள் விரும்பும் பெண்களை அவர்களுக்காக கடத்தி வர தயாராக உள்ளதாக தெரிவித்தார்.  இது நாடெங்கும் கடும் சர்ச்சையை கிளப்பியது.

 

ராம் கதம் தாம் கூறியதை தவறாக புரிந்துக் கொண்டதாக விளக்கம் அளித்தார்.  அந்த விளக்கத்தை ஏற்காத பலரும்  அவருக்கு எதிராக சாலை மறியல் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  போராட்டத்தின் போது அவருடைய படத்தை பெண்கள் செருப்பால் அடித்து தங்கள் எதிர்ப்பை காட்டி உள்ளனர்.

 

அத்துடன் மகாராஷ்ட்ர  மாநில மகளிர் ஆணையம் ராம் கதம் பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  அத்துடன் அவர் பேசியதற்கு சரியான விளக்கத்தை உடனடியாக அளிக்குமாறு நோட்டிஸ் ஒன்றை ஆணயம் அனுப்பி உள்ளது.

மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அமித்ஷாவுடன் இது குறித்து கலந்து பேசி உள்ளார்.  அதன்படி பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து ராம்கதம் நீக்கப்பட்டுள்ளார்.    அத்துடன் முதல்வர் சில காலங்களுக்கு  பொது நிகழ்வில் பங்கேற்க வேண்டாம் என ராம்கதமுக்கு அறிவுரை அளித்துள்ளார்.