ரேபிட் சோதனைக் கருவிகளை பயன்படுத்த வேண்டாம்… மாநிலங்களுக்கு ஐசிஎம்ஆர் திடீர் உத்தரவு…

டெல்லி:

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரேபிட் சோதனைக் கருவிகள் மூலம் நாடு முழுவதும் சோதனை செய்யப்பட்டு வரும், அந்த கருவிகள் மூலம் சோதனை செய்ய வேண்டாம் என மாநில அரசுகளுக்கு ஐசிஎம்ஆர் திடீரென தடை விதித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போதுள்ள கருவிகளிளின் மூலம் கொரோனா வைரஸ் சோதனை செய்தால், அதன் முடிவுகள் தெரிய 8 மணி நேரம் காத்திருக்கும் சூழல் உள்ளது. இதனால், உடனடியாக கண்டுபிடிக்கும் வகையில், ரேபிட் டெஸ் கருவிகள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது.

அந்த கருவிகளை அனைத்து மாநிலங்களுக்கும் மத்தியஅரசு அனுப்பி, சோதனை செய்ய அறிவுறுத்தியது. அதன்படி கடந்த 2 நாட்களாக ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சோதனைக்கருவிகள் மூலம் செய்யப்படும் சோதனைகள், அதன் முடிவுகள் சரியல்ல என்று ராஜ்ஸ்தான் மாநில அரசு குற்றம்சாட்டியதுடன், தனது மாநிலத்தில் பயன்படுத்த தடை விதித்தது.

மேலும், ரேபிட் கிட் கருவிகளில் மூலம் அறியப்பட்ட முடிவுகள் குறித்த வல்லுநர்கள் குழுவின் அறிக்கையையும் ஐசிஎம்ஆருக்கு அனுப்பி வைத்தது.

இதை ஆய்வு செய்த ஐசிஎம்ஆர்  ரேபிட் சோதனைக் கருவிகளை பயன்படுத்த வேண்டாம் என அனைத்து  மாநிலங்களுக்கும் உத்தரவிட்டு உள்ளது.

இரண்டு நாட்களுக்கு விரைவான சோதனை கருவிகளைப்  (ரேபிட்) பயன்படுத்த வேண்டாம் என்று மாநிலங்களுக்கு அறிவுறுத்துவதாக ஐ.சி.எம்.ஆர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று செய்தியாளர்களை சந்தித்த ஐ.சி.எம்.ஆரின் டாக்டர் ஆர்.ஆர். கங்ககேத்கர், “விரைவான சோதனை கருவிகளின் முடிவுகளில் அதிக வேறுபாடுகள் பதிவாகியுள்ளன. அடுத்த இரண்டு நாட்களில், எங்கள் அணிகளால் கிட் சோதனை செய்யப்பட்டு சரிபார்க்கப்படும். மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்படாது இரண்டு நாட்களுக்கு இந்த கருவிகளைப் பயன்படுத்துங்கள். ஐ.சி.எம்.ஆர் இரண்டு நாட்களில் அதன் பயன்பாடு குறித்து ஆலோசனை வழங்கும் என்று தெரிவித்து உள்ளார்.

இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.