டெல்லி:

ரசியலமைப்பற்ற குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாநில அரசுகளை கட்டாயப்படுத்த முடியாது என்று   காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் சுர்ஜித்வாலா கூறியுள்ளார்.

மத்தியஅரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் இந்த மசோதாவை அமல்படுத்த மாட்டோம் என்று கூறி வருகின்றன. கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில், சிஏஏ-க்கு எதிராக சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றி உள்ளன.

இதற்கிடையில், கேரளா மாநிலம் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசு உள்பட ஏராளமானோர் தரப்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக உச்சநீதி மன்றத்திலும் வழக்குகள் தொடர்ந்துள்ளன. இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளது. தனது அனுமதியின்றி, மாநில அரசு உச்சநீதி மன்றத்தில் எப்படி வழக்கு தொடர்ந்தது என்று கேரள மாநில அரசுக்கு கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் விளக்கம் கேட்டு உள்ளார். இது  சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் செய்திதொடர்பாளர் சுர்ஜித்வாலா

இத் நிலையில், மையத்துடன் உடன்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது, சிஏஏக்கு எதிராக செயல்பட மாநிலங்களுக்கு உரிமை உண்டு என்றும் நீதிமன்றத்தில் பிரச்சினை தீர்க்கப்படும் வரை “அரசியலமைப்பற்ற” சட்டத்தை செயல்படுத்த “கட்டாயப்படுத்த” முடியாது என்றும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜித்வாலா கூறி உள்ளார்.

மேலும்,  குடிமக்கள், கட்சிகள் மற்றும் மாநிலங்கள் சிஏஏ-வை  உறுதியுடன் தொடர்ந்து எதிர்க்கும், என்றும், உள்துறை மந்திரி அமித் ஷா மற்றும் மாநில ஆளுநர்களால் குடியுரிமை திருத்த சட்டத்தை மாநிலங்களில் அமல்படுத்த மீண்டும்  மீண்டும்  “கட்டாயப்படுத்துகிறது”, இது  ‘அரசியலமைப்பு கூட்டாட்சி’ என்ற கருத்துக்கு எதிரானது என்று கண்டனம் தெரிவித்து உள்ளார்.

ஒவ்வொரு மாநில சட்டமன்றத்திற்கும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கும் திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெறுவதற்கும் அரசியலமைப்பு உரிமை உண்டு, ஆனால் சட்டம் உச்சநீதிமன்றத்தால் அரசியலமைப்பு ரீதியாக அறிவிக்கப்பட்டால் அதை எதிர்ப்பது சிக்கலாக இருக்கும். “இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்பதை பாஜக அரசும் அதன் ஆளுநர்களும் மறந்துவிடக் கூடாது.

நிறுவப்பட்ட பாராளுமன்ற நடைமுறையின்படி, மாநிலங்கள்.  யூனியனுடன் உடன்படவில்லை, அரசியலமைப் பின் 131 வது பிரிவின் கீழ் தங்கள் அரசியலமைப்பு உரிமையின் மூலம் அதை அவர்களால் எதிர்க்க முடியும்.

ஏற்கனவே கடந்த காலங்களில், கர்நாடகா, பீகார், ராஜஸ்தான் போன்ற பல மாநிலங்கள், 131 வது பிரிவின் கீழ் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளன. “பிரிவு 131ன் கீழ் தற்போது தொடரப்பட்டுள்ள வழக்கு காரணமாக, இந்த பிரச்சினை தீர்க்கப்படும் வரை, CAA ஐ நடைமுறைப்படுத்த மாநிலங்களை “கட்டாயப்படுத்தக்கூடாது, இது,  ‘அரசியலமைப்பு கூட்டாட்சி’ என்ற கருத்துக்கு எதிரானது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.