மாநிலங்கள் வாரியாக கொரோனா பாதிப்பு எவ்வளவு – விவரம்

டெல்லி:

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில் கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்கள் முதல், இரண்டாம் இடங்களை பிடித்துள்ளன. மாநிலவாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட விபரங்கள் வெளியிகி உள்ளது.

இன்றைய விவரப்படி, நமது நாட்டில் கோரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 724 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த வாரம் இதே நாளில்  கொரோனா அறிகுறியுடன் 85 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே வாரத்தில் நோயின் தாக்கம் இருமடங்காக அதிகரித்து உள்ளது.

இந்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 17பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 724  பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்து உள்ளது. இவர்களில் 677பேர் இந்தியர்கள், 47 பேர் வெளிநாட்டினர் என்றும், 67 நோயாளிகள் குணமடைந்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.

நாட்டில் அதிகம் பேர் பாதிப்பு அடைந்த மாநிலமாக கேரளா உள்ளது. அதற்கடுத்ததாக மகாராஷ்ட்ராவில் 130பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் 43 பேர்,. தெலுங்கானாவில் 45 பேர், கர்நாடகாவில் 55பேர், டில்லியில் 35 பேர், அரியானாவில் 16பேர், ஜம்மு காஷ்மீரில் 13 பேர், லடாக்கில் 13பேர், மத்தியப் பிரததேசத்தில் 20 பேர், போபாலில் 5 பேர், உத்தரப் பிரதேசத்தில் 40 பேர், ஆந்திராவில் 12 பேர், பீகாரில் 6 பேர், மேற்கு வங்கத்தில் 10 பேர், உத்தர்கண்டில் 4 பேர், சண்டகரில் 7 பேர், கோவாவில் கோவாவில் 3 பேர், சட்டீஸ்கரில் 6 பேர், மிசோரம் மற்றும் மணிப்பூரில் ஒருவர், அந்தமான் நிக்கோபார் தீவில் ஒருவர் என கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளது.