மாடு தாக்குதலில் ஹேமமாலினி தப்பினார்!! ரெயில் நிலைய மேலாளர் சஸ்பெண்ட்

மதுரா:

பாஜக எம்.பி. ஹேமமாலினியை மாடு முட்ட முயற்சித்த சம்பவத்தில் ரெயில் நிலைய மேலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

உ.பி. மாநில பாஜக எம்.பி. ஹேமமாலினி தனது தொகுதியான மதுரா ரெயில் நிலைய சீரமைப்பு பணி தொடர்பான ஆய்வு மேற்கொண்டார். அப்போது நடைமேடையில் சுற்றித்திரிந்த காளை மாடு ஒன்று அவரை முட்ட முயற்சித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மாடு முட்டுவதில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பி ஓடினார்.

இந்நிலையில் நடைமேடையில் கால்நடைகள் சுற்றி திரிவதை தடுக்க தவறியதாக மதுரா ரெயில் நிலைய மேலாளர் கே.எல்.மீனா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

‘‘சஸ்பெண்ட் மட்டுமின்றி இது குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது’’ என்று வடக்கு மத்திய ரெயில்வே மண்டல வர்த்தக மேலாளர் சஞ்சித் தியாகி தெரிவித்துள்ளார். கே.எல். மீனாவுக்கு பதிலாக பி.எல். மீனா என்பவர் மதுரா ரெயில் நிலைய மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.