டெல்லி:

சிலைகடத்தல் ஆவணங்களை ஒருவாரத்திற்குள் தமிழகஅரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று, தமிழகஅரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய பொன் மாணிக்கவேல் ஓய்வு பெற்ற நிலையில், வழக்கு தொடர்பான ஆவணங்களை தமிழகஅரசிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.

அதன்படி, ஆவணங்களை ஒப்படைக்க தமிழக அரசு அறிவுறுத்தி யநிலையில், வழக்கு ஆவணங்களை விரைவில் கொடுப்பதாக கூறியிருந்தார்.

இதையடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவுபடி சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஒப்படைக்க மறுத்து வருவ தாகவும் தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில்  பொன்மாணிக்கவேலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையைத் தொடர்ந்து, சிலை கடத்தல் தொடர்பான ஆவணங் களை ஒரு வாரத்தில் ஒப்படைக்க பொன் மாணிக்கவேலுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், ஆவணங்களை ஒப்படைத்தது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, வழக்கை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.