சிலை கடத்தல்: அறநிலையத்துறை கூடுதல் ஆணையாளர் கைது

சிலை கடத்தல் வழக்கில் சிக்கிய, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் திருமகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவலர்கல்  சென்னையில் இன்று கைது செய்தனர்.

சென்னை  மயிலாப்பூரில் உள்ளது பிரபலமான கபாலீஸ்வரர் கோவில். இங்கு புன்னை வனநாதர் சன்னதியில், பழமையான மயில் சிலை இருந்தது. திருட்டுத்தனனமாக இது மாற்றப்பட்டு, புதிய சிலை வைக்கப்பட்டுள்ள தாக புகார் எழுந்தது. இது குறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தலைமையிலான, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு  காவலர்கள் , வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில் அறநிலையத்துறை கூடுதல் ஆணையாளர்  திருமகள் ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

தொடர்ந்து, மயில் சிலை விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட, திருமகளிடம் விசாரணை நடத்த, வியாசர்பாடியில் உள்ள, அவரது வீட்டிற்கு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு  காவலர்கள்  சென்ற போது, அவர் தலைமறைவானது தெரியவந்தது. அவரை  சிலை தடுப்பு காவலர்கள் வலைவீசி தேடிவந்தனர். இந்நிலையில், அவரை சென்னையில் கைது செய்தனர்.

விசாரணைக்கு பின்னர், கும்பகோணத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு அவரை அழைத்து சென்றனர்.