https://twitter.com/MrMagneto_offl/status/1186922803032772608

அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் பிகில். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ள இந்தப் படத்திற்கு தணிக்கை துறையினர் “யூ/ஏ” சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

தமிழ்நாட்டை தாண்டி கேரளாவில் விஜய் படங்களுக்கு பெரிய ஓபனிங் இருக்கும் பட்சத்தில் பிகில் படத்தில் வரும் அப்பா ராயப்பன் கதாபாத்திரத்தை சிலையாக செய்துள்ளனர் கேரளா ரசிகர்கள். பாலக்காட்டில் நடந்த அந்த சிலை திறப்பு விழாவின்போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.