தனுஷ் நடிப்பில் இந்த பொங்கலுக்கு வெளியான படம் பட்டாஸ். பொங்கலுக்கு வெளியான இப்படம் திரையரங்குகளில் ஓடி நல்ல வசூலை பெற்று தந்துள்ளது. இருப்பினும் படத்தை பிரபலப்படுத்தும் பணியில் ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக நெல்லையில் சுமார் 60 ஆயிரம் ரூபாய் செலவில் 7 அடி உயரத்தில் தனுஷுக்கு சிலை வைத்துள்ளனர்.

வேட்டி சட்டையில் கண்ணாடி அணிந்தபடி தனுஷ் நிற்பது போல வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சிலையுடன் ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்