சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றுவேன்: உயர்நீதி மன்றம் தமிழகஅரசுக்கு எச்சரிக்கை

சென்னை:

மிழகத்தில் தொடர்ந்து சிலைகள் திருடப்பட்டால், வழக்கை சிபிஐக்கு மாற்ற நீதிமன்றம் தயங்காது என்று சென்னை உயர்நீதி மன்றம் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது.

தமிழக கோவில்களில் உள்ள ஏராளமான பழங்கால சிலைகள் திருடப்பட்டுள்ளது தொடர்பான வழக்கில், ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் சிறப்பு சிலை கடத்தல் தடுப்பு குழுவை உயர்நீதி மன்றம் அமைத்து, விசாரித்து வருகிறது.

இந்த நிலையில் கடந்த விசாரணையின்போது,   சிலைகளை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை கள் குறித்தும், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு அரசு தரப்பில் அழைக்கப்பட்டு வரும் ஒத்து ழைப்பு குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதபதி மகாதேவன் அமர்வு முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் வழக்கறிஞர் உடல்நலக் குறைவு காரணமாக வர இயலாததால், அறிக்கைகளைத் தாக்கல் செய்ய அவகாசம் அளிக்குமாறு அரசு தரப்பில் கோரப்பட்டது.

இதற்கிடையில், சிலை கடத்தல் தொடர்பான வழக்கை தொடர்ந்த மனுதாரர்களில் ஒருவரான நரசிம்மன் என்பவர், ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் ஆலயத்தின் 13 சிலைகள் திருடு போயிருப்பதாகவும், இது தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் நீதிமன்றத்தில் முறையிட்டார்.

இதைக் கேட்ட நீதிபதி, புகார் அளித்த பின்னரும் ஸ்ரீ ரங்கம் கோவில் சிலைகள் திருட்டு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்.

கோவில் சிலைகள் மக்களின் நம்பிக்கைக்கு உரியவை என்பதால் அவற்றைப் பாதுகாக்க வேண்டி யது அரசின் கடமை என்றும் நீதிபதி கூறினார். கோவில் சிலைகள் கடத்தப்படுவதைக் கண்டு கொள்ளாமல் நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது என்று கூறிய நீதிபதி, நிலைமை இதேபோல் மோசமாக தொடருமானால், இந்த வழக்குகளை சிபிஐ வசம் ஒப்படைக்க உத்தரவிடுவதற்கும் நீதிமன்றம் தயங்காது எனத் தெரிவித்தார்.

பின்னர் வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து  உத்தரவிட்டார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Statue kidnapping case: High Court condemns to the Tamil Nadu government, சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றுவேன்: உயர்நீதி மன்றம் தமிழகஅரசுக்கு எச்சரிக்கை
-=-