சிலை கடத்தல் வழக்கு: தமிழகஅரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி!

டில்லி,

மிழகத்தில் நடைபெற்ற சிலை கடத்தல் வழக்கை ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் விசாரிக்கலாம் என உச்சநீதி மன்றம் கூறியுள்ளது. மேலும் தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நடைபெற்ற சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை ஐ.ஜி. பொன்.மாணிக்க வேல் விசாரிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து பொன்.மாணிக்கவேலை ரெயில்வே துறைக்கு மாற்றி தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால், ஐகோர்ட்டு,  அவரே விசாரிக்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியது.

இந்நிலையில் ஐகோர்ட்டின் தீர்ப்பை  எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது,  தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ள உச்சநீதிமன்றம், ஐ.ஜி பொன் மாணிக்கவேல் ரயில்வே துறைக்கு மாற்றப்பட்டிருந்தாலும், சிலை கடத்தல் வழக்கை அவர் விசாரிக்கலாம் என கூறியுள்ளது.

கார்ட்டூன் கேலரி