அம்மா உணவக தாக்குதலுக்கே அதிரடி நடவடிக்கை – இனி சிலைகள் பாதுகாப்பாக இருக்கும்?

தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற சிலை உடைப்புகள், சிலை அவமதிப்புகள், பாஜகவின் ஊர்வல வன்முறைகள், பேனர் விதிமீறல்கள், பொள்ளாச்சி பாலியல் குற்றங்கள் என்ற நடைபெற்ற ஏராளமான குற்றங்களுக்கு முறையான மற்றும் அதிரடியான சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

ஆனால், சில திமுகவினர் ஆர்வக்கோளாறால் அம்மா உணவகத்தை அடித்து நொறுக்கிய சம்பவத்திற்கு, உடனடியாக எதிர்வினையாற்றிய திமுக தலைவர், அவர்களை கட்சியிலிருந்து நீக்கியுள்ளதோடு, சட்ட நடவடிக்க‍ைக்கும் ஆவண செய்துள்ளார்.

ஆனால், திமுக வந்துவிட்டது; வன்முறைகள் தொடங்கிவிட்டன என்று திமுக எதிர்ப்பாளர்கள் தங்களின் வழக்கமான பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.

திமுகவினர் செய்த இந்த செயலுக்கே அதிரடி நடவடிக்கை என்றால், தமிழ்நாட்டில் சங்பரிவாரங்கள் வழக்கமாக செய்யக்கூடிய சிலைகள் அவமதிப்பு(பெரியார், அண்ணா, அம்பேத்கர், எம்ஜிஆர்) நடவடிக்கைள் இனி நடைபெறாது என்று நம்பப்படுகிறது. ஏனெனில், அரசின் தரப்பில் கடுமையான நடவடிக்கைகள் பாயும் என்ற அச்சம் ஏற்படலாம். மேலும், இதுவரை எச்.ராஜா, கல்யாணராமன் உள்ளிட்டவர்கள் பேசிவந்த பேச்சுகளும் முற்றுபெறும் என்றும் கருதப்படுகிறது.