கட்டுப்பாடுடன் இருங்கள்…! மக்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்

--
சென்னை:

க்கள் கொரோனா விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும், அரசு கொடுத்திருக்கும் வழிகாட்டுதல்களை மக்கள் சரியாக பின்பற்ற வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

கொரோனா 4வது கட்ட ஊரடங்கு வரும் 31ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தமிழகத்தில் தொற்று தீவிரமாக பரவி வருவதால், ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு நீட்டிப்பி மற்றும் தளர்வுகள் குறித்து,  சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி அவர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கொரோனா குறைக்கப்பட்டாலும் சென்னையில் அதிகமாக உள்ளது. கொரோனாவை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால்,   கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. வல்லரசு நாடுகளை விட தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு. நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது முதல் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். கொரோனாவை பற்றி மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம், ஆனால் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அரசின் வழிகாட்டுதல்களை மக்கள் சரியாக பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.