வயிற்று பசிக்காக சிறிய அளவில் உணவு பண்டங்களை திருடுவது குற்றமல்ல ªன்று இத்தாலி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உக்ரைனை பூர்வீகமாக கொண்ட ஒஸ்டிரியாகோவ் என்பவர் ஆதரவற்றவர். இவர் கடந்த 2011ம் ஆண்டில் இத்தாலியில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் இருந்து 4.50 டாலர் மதிப்புள்ள 2 துண்டு சீஸ் மற்றும் ஒரு சாஸேஜ் பாக்கெட்டை திருடி தனது பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்.

ரொட்டி துண்டுகளுக்கு மட்டும் இவர் பணம் செலுத்தினார். இதை பார்த்த அந்த கடையின் வாடிக்கையாளர் ஒருவர் பாதுகாப்பு ஊழியர்களிடம் தகவல் கொடுத்தார். உடனடியாக அவரை படித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 6 மாத கால சிறைத் தண்டனையும், அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது.

இந்த வழக்கு அந்நாட்டின் உச்சநீதிமன்றத்திற்கு சென்றது. வயிற்று பசிக்காக சிறிய அளவில் திருடுவது குற்றமல்ல. உடனடி மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்து தேவை என்ற அடிப்படையில் இது குற்ற செயலாகாது என்று கூறி அவருக்கு அளிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.