1988 – டென்னிஸ் நட்சத்திரம் ஸ்டெபி கிராஃபின் தங்க ஆண்டு!

பாரிஸ்: உலக டென்னிஸ் நட்சத்திரங்களிலேயே, ஒரே ஆண்டில் ஒலிம்பிக் தங்கம் உள்ளிட்ட, இதர 4 பிரதான சாம்பியன் பட்டங்களையும் வென்ற ஒரே வீராங்கனையாக திகழ்கிறார் ஜெர்மனியின் ஸ்டெபிகிராப்.

ஏனெனில், இந்தாண்டு டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் தொடர் ஒத்திவைக்கப்பட்டவுடன், 4 பிரதான டென்னிஸ் சாம்பியன் பட்டங்களுடன், ஒலிம்பிக் தங்கத்தையும் கைப்பற்றிவிட வேண்டுமென்ற ஆசையைக் கொண்டிருந்த நோவக் ஜோகோவிக்கின் கனவு தகர்ந்தது.

இதன்மூலம், அவர் ஸ்டெபி கிராப், ஆன்ட்ரே அகாசி, செரினா வில்லியம்ஸ் மற்றும் ரபேல் நாடல் ஆகியோரின் வரிசையில் இணைய முடியாமல் போய்விட்டது.

கடந்த 1988ம் ஆண்டு, தனது 19ம் வயதில், இந்த அரிய சாதனையை செய்தார் ஸ்டெபி கிராப். அந்த ஆண்டில் விம்பிள்டன், 2 பிரெஞ்சு ஓபன் பட்டங்கள், ஆஸ்திரேலிய ஓபன் பட்டங்களுடன் சேர்த்து, சியோல் ஒலிம்பிக்கில், அர்ஜெண்டினாவின் சபாடினியை வீழ்த்தி தங்கத்தைக் கைப்பற்றினார். ஸ்டெபி கிராபின் இந்த சாதனை தற்போது வரை முறியடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.