ஸ்டெர்லைட் விவகாரம்: ஆலையை மூட வலியுறுத்தி 18 கிராம பொதுமக்கள் பேரணி

தூத்துக்குடி:

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 18 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், ஆலையை முற்றுகையிட பேரணி செல்கின்றனர். இதன் காரணமாக ஆலை பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கேன்சர், மூச்சுத்திணறல், சிறுநீரக பிரச்சினை  போன்ற பல்வேறு வகையான  உயிர்கொல்லி நோய்களை உருவாக்கி வரும், ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூட வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.

இன்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அந்த பகுதியை சேர்ந்த 18 கிராம பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர்  பேரணி நடத்துகின்றனர்.

இந்த பேரணி ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட செல்கிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.