ஸ்டெர்லைட் விவகாரம்: உச்சநீதி மன்றத்தில் வேதாந்தா கேவியட் மனு

டில்லி:

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை ஆணையம் அனுமதி வழங்கிய நிலையில், அதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்து உள்ளது.

இந்த நிலையில், உச்சநீதி மன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிறுவனமான வேதாந்தா கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழக அரசால் சீல் வைக்கப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கி உள்ளது, தூத்துக்குடி பகுதியில் மீண்டும் பதற்றத்தை  ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், என்ஜிடி உத்தரவை எதிர்த்து, தமிழகஅரசு உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என முதல்வர் எடப்பாடி அறிவித்து உள்ளார்.

இதற்கிடையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என வலியுறுத்தி தூத்துக்குடியில் மீண்டும் போராட்டம் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக பரபரப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில், ஸ்டெர்லைட்  ஆலை நிறுவனதபன வேதாந்தா குழுமத்தின்  உச்ச நீதி மன்றத்தில்  இன்று கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுவில்,  தமிழ்நாடு அரசு தொடரவுள்ள மேல்முறையீட்டு வழக்கில் தங்களது கருத்தை கேட்காமல், எந்த  உத்தரவும் பிறப்பிக்க கூடாது என  குறிப்பிட்டுள்ளது.