தூத்துக்குடி:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான இன்றைய போராட்டத்தில் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் கலந்து கொண்டனர். போலீசாரின் எச்சரிக்கையை மீறி போராட்டக்காரர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை யிட்டுள்ளதால் பதற்றம் நீடித்து வருகிறது.

இதன் காரணமாக போராட்டக்காரர்களை அடக்க முடியாமல் போலீசார் திணறி வருவதாகவும், போராட்டக் காரர்களை ஒடுக்க அண்டை மாவட்டங்களில் இருந்து போலீசாரை அழைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், நெடுஞ்சாலைகளில் போராட்டக்காரர்கள் மரங்களையும், முள் செடிகளை போட்டு போக்குவரத்தை தடை செய்துள்ளனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள் வெவ்வெறு பகுதி வழியாக  சாரை சாரையாக வந்து கலந்துகொள்வதால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இதன் காரணமாக பல இடங்களில் , போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்து வருகிறது.

இந்நிலையில், காவலர்களை தடுப்பையும் மீறி போராட்டக்காரர்கள் ஒரு பகுதியில் தூத்துக்கு  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைத்து தாக்குதல் நடத்தினர். ஆட்சியர் அலுவலக வாயில் கண்ணாடிகளை அடித்து நொறுக்கப்பட்டது. இதன் காரணமாக போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது. பற்றமும் நீடித்து வருகிறது.

ஆட்சியர் அலுவலகத்தில் கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்.

போராட்டக்காரர்கள் தாக்குதலை அடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் பணியில் இருந்த ஊழியர்கள் அனைவரும்  பாதுகாப்பாக வேறு இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர். ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள எஸ்.பி. அலுவல கத்திற்கு ஊழியர்கள் அனைவரும் மாற்றப்பட்டனர்.

போராட்டக்காரர்கள்  ஆயிரக்கணக்கில் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் திரள்வதால்,  போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

போராட்டம் காரணமாக  தூத்துக்குடி – நெல்லை நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  பிரதான சாலைகளில் முள்மரங்களை வெட்டி போட்டு போராட்டக்காரர்கள் மறியல்  செய்து வருகின்றனர்.  ஆட்சியர் அலுவலகத்திற்குள் டயரை கொளுத்தி போட்டதால் கடும் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது.

கல வரத்தை கட்டுப்படுத்த விருதுநகர், மதுரை மாவட்டங்களில் இருந்து 2000 போலீசார் தூத்துக்குடி விரைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

புற்றுநோய், சிறுநீரகம் செயலிழப்பு, மூச்சுத்திணறல் போன்ற உயிர்க்கொல்லி நோய்களை தொற்றுவித்து வரும்   ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூட வேண்டும் என்றும்,  ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும் கூறி அப்பகுதி மக்கள் கடந்த 100 நாட்களை தாண்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மாநில, மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்காத நிலையில், விரக்தியின் விளிம்புக்கு சென்ற பொதுமக்கள் இன்று  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இதற்காக மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கிலான பொதுமக்கள் தூத்துக்குடியில் குவிந்தனர்.

ஒருபக்கம் போலீசார் தடுத்தால், மறு பகுதி வழியாக பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பல இடங்களில்   போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கல்வீச்சு, வாகனங்கள் எரிப்பு என தூத்துக்குடியில் போராட்டம் முற்றியுள்ளது. போலீசாரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக நேற்றே 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்திருந்தார். அதன்படி, 21-ம் தேதி இரவு 10 மணி முதல் 23-ம் தேதி காலை 8 மணி வரை தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம், சிப்காட் காவல் நிலைய எல்கைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

ஆனால் 144 தடை உத்தரவை மீறி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மடத்தூரிலிருந்து பேரணியாக புறப்பட்டு ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட முயன்றனர். அங்கு, ஏற்கெனவே குவிக்கப்பட்டிருந்த ஏராளமான போலீஸார், தடுப்புகளை அமைத்து போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது, பொதுமக்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  போலீஸாரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானதால் போராட்டக்காரர்கள் மேலும் கொதிப்படைந்தனர்.

இதனால் தூத்துக்குடியே போர்க்களமாக காட்சியளிக்கிறது/

கலவர வீடியோ மற்றும் போட்டோக்கள்: