ஸ்டெர்லைட் மூடக்கோரி வழக்கு: கோடை விடுமுறைக்கு பின்பே உச்சநீதி மன்றத்தில் விசாரணை

டில்லி:

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தொடரப்பட்ட பொதுநல மனு கோடை விடுமுறைக்குப் பின் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக  உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது.

ஏற்கனவே கடந்த 25ந்தேதி அன்று விசாரணையின்போது 28ந்தேதி விசாரிக்கப்படும் என்று உச்சநீதி மன்றம் அறிவித்தது. ஆனால், தற்போது கோடை விடுமுறைக்கு முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவித்து உள்ளது.

தூத்துக்குடியில்,ஸ்டெர்லைட்  ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, நாகர்கோவிலை சேர்ந்த சிவகுமார் என்பவர் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ததை அடுத்து, அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. கோடை விடுமுறைக்கு பின்பே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கூறி உள்ளது.