ஸ்டெர்லைட் ஆலைலைய மூடுவது அரசின் கொள்கை முடிவு: நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

மதுரை:

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பான வழக்கில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது என்பது தமிழக அரசின் கொள்கைமுடிவுதான் என்று  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு விளக்கம் தெரிவித்து உள்ளது.

ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிரான கடந்த மே மாதம் 22ந்தேதி நடைபெற்ற  மக்கள் போராட்டத்தின்போது,  காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13பேர் உயிரிழந்தனர்.

இந்த துப்பாக்கி சூடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், ஆலையை நிரந்தர மாக மூட வேண்டும்,  துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்துக்குக் கூடுதல் நிதியுதவி வழங்க வேண்டும்  உள்பட 16 மனுக்கள் இன்று மதுரை உயர்நீதி மன்ற கிளையில்  தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த வழக்குகளை உயர்நிதி மன்ற  நீதிபதிகள் செல்வம், பசீர் அகமது ஆகியோர் கடந்த 13ந்தேதி விசாரணையின்போது,  ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தமிழக அரசின்  அரசாணையை என்றும்,  ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என அரசு நினைத்தால், அரசு கொள்கை முடிவெடுத்து, தகுந்த அரசாணை பிறப்பிக்க வேண்டும்  என்று கருத்து தெரிவித் திருந்தனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட விளக்கத்தில், ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என்றும்,  தமிழக அரசின் உயர்மட்ட குழு ஆலோசித்து அதன்பின்னர் எடுக்கப்பட்ட முடிவுதான் என்றும்,   தமிழக அரசின் கொள்கை முடிவின் படி நடவடிக்கை என்பதால் ஸ்டெர்லைட் ஆலை இனி இயங்க முடியாது என்று விளக்கம் அளித்துள்ளது.