ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: ‘அம்னெஸ்டி’ அமைப்பு கடும் கண்டனம்

--

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு உலளாகவிய மனிதஉரிமைகள் அமைப்பான  ‘அம்னெஸ்டி’  தமிழக அரசுக்கு  கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

தூத்துக்குடியில் இயங்க வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் போது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயரிழந்துள்ளனர். ஏராளமானோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காவல்துறையினரின் துப்பாக்கி சூடுக்கு, நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  தேசிய மனித உரிமைகள் ஆணையம் இதுகுறித்து விளக்கம் அளிக்க கோரி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்த நிலையில் உலகளாவிய மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி அமைப்பும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இந்த துப்பாக்கி சூடு சம்பவங்கள் குறித்த பல கேள்விகளுக்கு போலீசார் பதில் அளிக்க வேண்டும் என்றும், இதற்கு பொறுப்பானவர்கள் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தப்பட்டு தண்டிக்க வேண்டும் என்று கூறி உள்ளது.