திடீரென ஸ்டெர்லைட் ஆலையை மூட முடியாது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சிவகாசி:

தூத்துக்குடியில் ஸ்டெலைட் ஆலைக்கு எதிராக கடந்த 45 நாட்களுக்கும் மேலாக மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,  ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடிவிட முடியாது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறி உள்ளார். இது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்டெலைட் ஆலையில் இருந்து வெளியாகும் கழிவு நீர் மற்றும் நச்சுப்புகை காரணமாக பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் கடந்த பல ஆண்டுகளாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்போது போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.

பொதுமக்களுக்கு ஆதரவாக அதிமுக எம்எல்ஏ  சண்முக நாதனும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். மேலும் வெளிநாடுகளில் வசித்து வரும் தமிழர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில, ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடிவிட முடியாது என்றும்,  ஆலையால் பாதிப்புகள் இருக்கிறதா என்பதை ஆராய்ந்தே சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.