ஸ்டெர்லைட் ஆலையை மூட முடியாது: வேதாந்தா குழும இயக்குனர் கிஷோர் குமார்

--

தூத்துக்குடி:

யிர்கொல்லி நோய்களை உருவாக்கி வரும்  ஸ்டெர்லைட் ஆலையை மூடக்ககோரி அப்பகுதி மக்கள் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக போராடி வரும் நிலையில்,  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது என்கிற பேச்சுக்கே இடமில்லை,அதை மூட முடியாது என்று- வேதாந்தா குழும இயக்குனர் கிஷோர் குமார் ஆவணவமாக பதில் அளித்துள்ளார்.

கேன்சர், முச்சிறைப்பு, சிறுநீரகம் செயலிழப்பு போன்ற பல்வேறு உயிரிக்கொல்லி நோய்களை உருவாக்கி வரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் நடத்தி வரும் போராட்டம் 75 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூட வலியுறுத்திப் பொதுமக்களும், கல்லூரி மாணவர்களும், பல்வேறு அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆலையின் உரிமத்தை மாசு கட்டுப்பாட்டு வாரியம் புதுப்பித்து வழங்காததால் செயல்பாடு தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தை நடத்தி வரும் வேதாந்தா குழும இயக்குனர் கிஷோர் குமார்,  ஆலையை மூடுவது என்கிற பேச்சுக்கே இடமில்லை எனத் தெனாவட்டமாக பதில் அளித்தார்.

மேலும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உரிமத்தைப் பெறச் சட்டப்படியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்றும், அங்கு வெற்றி பெற்று ஆலையை தொடர்ந்து நடத்துவாம்,  வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.   தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது என்கிற பேச்சுக்கே இடமில்லை, அதை மூட ஈமுடியாது என்றும் என்றும் கூறி உள்ளார்.