டில்லி:

தூத்துக்குடி ஸ்டெர்லை ஆலை மீண்டும் இயக்கப்படும் என்று வேதாந்தா காப்பர் நிறுவனத்தின். இந்தியாவுக்கான  முதன்மை செயலாளர் பி.ராம்நாத் கூறி உள்ளார்.

உயிர்க்கொல்லி நோய்களை உருவாக்கி வரும் தூத்துக்குடி தாமிர ஆலைக்கு எதிராக அந்த பகுதி மக்கள்  கடந்த 100 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 22ந்தேதி நடைபெற்ற 100வது நாள் போராட்டத்தின் போது வன்முறை வெடித்து துப்பாக்கிசூடு வரை சென்றது. 13 பேர் உயரிழந்துள்ளனர்.

இதன் காரணமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்டு வந்த மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க மாட்டோம் என்று தூத்துக்குடி கலெக்டர் தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்றும், இந்த இந்த தாமிர பிளாண்டை  வேறு எங்கும் மாற்ற திட்டமிடவில்லை என்று வேதாந்தா நிறுவனத்தின் முதன்மை செயல்அதிகாரி ராம்நாத் தெரிவித்துள்ளார்.

மேலும், நாங்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் என்றும், சட்டப்படி அந்த ஆலையை இயக்க செய்வோம் என்றும், இந்த பிரச்சினையை நாம் சமாளிக்க முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

தங்களது ஆலை காரணமாக அந்த பகுதியில் காற்று மாசு மற்றும் நீர் மாசுபாடு இல்லை என்று மறுத்துள்ள ராம்நாத், கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து ஆலை இயங்காமல் உள்ளது என்பதை உறுதிபடுத்திய அவர், ஆலையை மீண்டும் இயங்க  பெரிய முயற்சி தேவைப்படும். ஆனால், ஆனால் நாங்கள்  முடிந்தவரை விரைவாக செயல்பட்டு, மீண்டும் ஆலையை இயக்கும் பணி தொடருவோம்  என நம்பவுதாக தெரிவித்துள்ளார்.

தமிழக அரசும், மாவட்ட ஆட்சியரும் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்காது என தெரிவித்து வரும் நிலையில், வேதாந்தா நிறுவனத்தின் அதிகாரி ஆலையை மீண்டும் இயக்குவோம் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.