சென்னை:

ஸ்டெர்லைட் ஆலை எந்த நிலையிலும் திறக்கப்பட மாட்டாது என தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி  பதில் கூறினார்.

அமைச்சர் தங்கமணி

க்கள் போராட்டம் காரணமாக மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்ட நிலையில், இன்று உச்சநீதி மன்றமும் ஆலையை திறப்பதற்கு தடை விதிக்க மறுத்து விட்டது.

இந்த நிலையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் இதுகுறித்து கேள்வி எழுப்பினார். அப்போது, நேற்று நான் பேசும்போது ஸ்டெர்லைட் ஆலை குறித்து குறிப்பிட்டேன். இன்று ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கு மத்திய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய அனுமதி செல்லும் என்று உச்சநீதி மன்றம்  தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த விஷயத்தில் தமிழக அரசு அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை அறிய விரும்புகிறேன் என்றார்.

இதற்கு பதில் அளித்து பேசிய தமிக மின்துறை அமைச்சர் தங்கமணி,  ஸ்டெர்லைட் ஆலை திறப்பது  தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவின் முழு விவரம் கிடைக்கப் பெறவில்லை என்றவர், எந்த சூழ்நிலையிலும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படாது. தேவைப்பட்டால் உச்சநீதி மன்றத்தில் சீராய்வு மனு தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.