ஸ்டெர்லைட்: வீடுகளில் கருப்புகொடி கட்டி மக்கள் எதிர்ப்பு

தூத்துக்குடி:

மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம்  உத்தரவிட்டுள்ள நிலையில், ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடிகளை ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த திங்கட்கிழமை ஆட்சியரின் குறை கேட்பு கூட்டத்தில் ஏராள மானோர் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மனு கொடுத்தனர். அதைத் தொடர்ந்து பல இடங்களில் அரசியல் கட்சியினர், மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், இன்று ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து தரப்பினர் கலந்துகொள்ளும் கூட்டம் நடைபெற்று வருகிறது.