சீனா மீது அமெரிக்கா போர் தொடுக்கும்!:  டிரம்ப்பின் முதன்மை ஆலோசகர் அதிர்ச்சி பேட்டி

 

வாஷிங்டன்:
அமெரிக்க அதிபராக பதியேற்றது முதல் டொனால்டு டிரம்ப் அதிரடியாக செயல்பட்டு வருகிறார்.  அமெரிக்கவாழ் வெளிநாட்டவர்களுக்கான விசா அனுமதி தொடர்பாக கடுமையான நடவடிக்கைகளை அவரது அரசு எடுத்துள்ளது.  இதனால் அமெரிக்க டாலர் மதிப்பும் கணிசமாக குறிந்து உள்ளது.

மேலும், அதிபர் டிரம்ப்பின் அதிரடித் திட்டங்களில் சீனா மீது போர் தொடுப்பதாக இருக்குமோ என்கிற பதற்றத்தில் மக்கள் இருக்கிறார்கள்.

தனது நாணய மதிப்பை குறைத்தது மற்றும் தென் சீனக்கடலில் ராணுவ விரிவாக்கம் போன்ற  சீனாவின்  நடவடிக்கைகளை  பதிவி ஏற்பதற்கு முன்பே டொனால்டு டிரம்ப்  கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்த நிலையில் டிரம்ப்பின் முதன்மை ஆலோசகரான ஸ்டீவ் பெனான்  தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “சந்தேகமே இல்லை.  இன்னும் சில ஆண்டுகளில் சீனா மீது அமெரிக்கா போர் தொடுக்கும்” என்று தெரிவித்துள்ளது உலக அளவில் அதிரச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

பெனான், அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் தேசிய பாதுகாப்பு மற்றும் திட்டக்குழுவில் முதன்மை  ஆலோசகராக இருப்பவர். மேலும் அமெரிக்கக் கடற்படையின் பசிபிக் பெருங்கடல் பகுதியில் தலைமைக் கமாண்டோ பொறுப்பில் இருந்தவரும்கூட.

பசிபிக் கடல் எல்லை பங்கீடு தொடர்பாக சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிடையே தொடர்ந்து கருத்து வேற்றுமைகள் நீடித்து வருகின்றன. . போதாக்குறைக்கு சீனாவும், பசிபிக் பெருங்கடலில் செயற்கை தீவுகளை உருவாக்கி தனது ராணுவத் தளவாடங்களை அங்கே நிறுத்தி உள்ளது. அதுமட்டுமல்ல…  கடந்த வாரம் சீன இராணுவ உயர் அதிகாரி ஒருவரும், “அமெரிக்கா உடனான போர் என்பது வெறும் கனவுப் பேச்சு இல்லை. அதற்கான திட்டங்கள் நிறைவேறிக் கொண்டே இருக்கின்றது” என்று தெரிவித்தார்.

சீனா – அமெரிக்கா இடையே போர் மூண்டால் அது இரு நாடுகளுக்கிடையேயான  போராக மட்டும் இருக்காது. இரு நாடுகளுக்கும் நெருக்கமான நாடுகளும் போரில் குதிக்கும். இதனால் மூன்றாவது உலகப்போர் ஏற்படும் அபாயம் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.