இன்றும் நங்கூரமிட்ட ஸ்டீவ் ஸ்மித் – ஆஸ்திரேலிய ரன் எண்ணிக்கை 350ஐ தாண்டுமா?

சிட்னி: முதல் ஒருநாள் போட்டியைப் போலவே, ஆஸ்திரேலிய அதிரடி மன்னன் ஸ்மித், இன்றும் சிறப்பாக ஆடி வருகிறார்.

மூன்றாவது விக்கெட்டாக களமிறங்கிய அவர், தற்போதைய நிலவரப்படி, 57 பந்துகளை சந்தித்து, 1 சிக்ஸர்கள் & 13 பவுண்டரிகள் உதவியுடன் 88 ரன்களை விளாசியுள்ளார்.

தற்போதைய நிலையில், ஆஸ்திரேலிய அணி, 40 ஓவர்களில், 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 277 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் 10 ஓவர்கள் பாக்கியிருப்பதாலும், அதிக விக்கெட்டுகள் கைவசம் இருப்பதாலும், அந்த அணி எளிதாக 350 ரன்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கடந்தப் போட்டியைப் போலவே, இன்றையப் போட்டியிலும், ஸ்மித் சதமடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய பேட்டிங் வரிசை பலவீனமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதைவிட, பந்துவீச்சு வரிசைதான் மிகவும் பலவீனமாக இருக்கிறது. விராத் கோலி, பிடிவாதமாக தொடர்ந்து ஐந்த பந்துவீச்சாளர்கள‍ையே பயன்படுத்தி வருகிறார்.

You may have missed