மெல்போர்ன்:

ந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன், ஸ்டீவ் சுமித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோருக்கு 1 ஆண்டு கிரிக்கெட் விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.

மேலும், மற்றொரு வீரரான  பான்கிராப்டுக்கு 9 மாதம் தடையும் விதித்து உத்தரவிட்டுள்ளது. ஆனால், அவர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது குறித்து, பிசிசிஐ முடிவு செய்யலாம் என்றும் தெரிவித்து உள்ளது.

சமீபத்தில், கேப்டவுனில் நடந்த தென்னாப்பிரிகாவுக்கு எதிரான  3-வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 322 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.  இந்த டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டத்தில், ஆஸ்திரேலிய இளம் வீரர் கேமரூன் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்த விசாரணையில், பான்கிராப்ட் தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த மஞ்சள் நிற பொருளினால் பந்தை சேதப்படுத்தியதும், இதன் காரணமாக  பந்து, ‘ரிவர்ஸ் ஸ்விங்’ ஆகும் என்று, தனது அணி வீரர்கள் கூறியதாக பான்கிராப்ட் கூறியிருந்தார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச்சாட்டை  ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் ஒப்புக் கொண்டார். இது உலகம் முழுவதும் உள்ள மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

அதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல், தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு உத்தரவிட்டார்.

அதையடுத்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தலின் பேரில், ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் சுமித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் தங்களது பொறுப்பில் இருந்து விலகினர்.

இதற்கிடையில், ஸ்டீவ் சுமித், டேவிட் வார்னர் குறித்து விசாரணை நடத்திய ஐசிசி, ஸ்டீவ் சுமித்துக்கு போட்டி கட்டணத்தில் 100 சதவீத அபராதமும், ஒரு டெஸ்டில் விளையாட தடையும் விதித்தது.

அதுபோல, பான்கிராப்டுக்கு போட்டி கட்டணத்தில் 75 சதவீதம் அபராதத்துடன், 3 தகுதி இழப்பு புள்ளியும் அளிக்கப்பட்டது.

இநநிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு, சக வீரர்கள் மற்றும்  தலைமை பயிற்சியாளர் டேரன் லீமான்  ஆகியோரிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து  அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

தவறு செய்ததை வெளிப்படையாக ஒப்புக் கொண்ட ஸ்டீவன் சுமித், வார்னர்   இருவருக்கும் தலா ஒரு ஆண்டு தடை விதித்துள்ளது. மேலும்,  பான்கிராப்ட்க்கு 9 மாதமும் விளையாட தடை விதித்துள்ளது.

அதே நேரத்தில் ஐபிஎல் போட்டிகளில் தேர்வாகி உள்ள ஸ்டீவ் மற்றும் வார்னர் விளையாடுவது குறித்து பிசிசிஐ முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்து உள்ளது.