மெல்போர்ன்: இந்தியாவுக்கு எதிரான இருதரப்பு தொடர் தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்று எனவும், அதனால் நீண்டநாட்கள் காத்திருக்க முடியாது என்றும் கூறியுள்ளார் ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்.

அவர் பேசியுள்ளதாவது, “ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணிக்கு எதிரான தொடரை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். அந்த அணியின் ஃபார்ம் சிறப்பாக உள்ளது. இந்தியாவுக்கு எதிரான தொடர் என்பது எப்போதுமே சிறப்புவாய்ந்த ஒன்று.

இந்தியக் கேப்டன் விராத் கோலி ஒரு சிறந்த கேப்டன் மற்றும் அணியின் வெற்றிக்காக கடுமையாகப் போராடுகிறார். சமீபத்தில் அவரைத் தொடர்புகொண்டு பேசி, இந்தியாவிலுள்ள சூழல் குறித்து கேட்டறிந்தேன்.

உலகக்கோப்பை லீக் போட்டியில் என்னைக் கிண்டல் செய்த இந்திய ரசிகர்களுக்காக கோலி மன்னிப்புக் கேட்டது, அவரின் மீதான மரியாதையை அதிகப்படுத்தியது. கோலி, தனது அணியை எப்படி சிறப்பாக வழிநடத்துகிறார் என்பதற்கு இது உதாரணம்” என்று பேசினார் ஸ்மித்.

இந்தாண்டு இறுதியில், இந்திய அணி, ஆஸ்திரேலியா செல்வதற்கு திட்டமிட்டுள்ளது. ஒருநாள் போட்டி, டி-20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கிறது.