Random image

நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துக் கொண்டார் ஸ்டீவ் ஸ்மித்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்துள்ளார். பந்தை சேதப்படுத்தியதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க ஸ்டீவ் ஸ்மித்திற்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

stevesmith

பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், தனது காதலியை திருமணம் செய்துள்ளார். கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அந்நாட்டு அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரில், ஆஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது கேமராவில் பதிவாகியது.

இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. இதையடுத்து, பந்தை சேதப்படுத்தியதில் தொடர்புடைய ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகிய இருவரும் சர்வதேச போட்டிகளில் ஓராண்டு விளையாட தடை விதிக்கப்பட்டது. அதேபோல், பான்கிராஃப்ட் 9 மாதங்கள் விளையாட தடை விதிக்கப்பட்டது. சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தாலு, உள்ளூர் மற்றும் லீக் போட்டிகளில் ஸ்டீவ் மற்றும் வார்னர் விளையாடி வருகின்றனர்.

இந்நிலையில், ஸ்டீவ் ஸ்மித் தனது நீண்ட நாள் காதலியான டேனி வில்லிஸை நேற்று திருமணம் செய்துள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஸ்டீவ் தனது டிவிட்டர் பதிவில், ” எனது தோழியை திருமணம் செய்துள்ளேன். இந்த நாள் என்னால் மறக்க முடியாத நாளாகும். டேனி மிகவும் அழகாக உள்ளார் “ என குறிப்பிட்டுள்ளார்.