அடிலெய்டு: இந்த வார தொடக்கத்தில் பிரிஸ்பேனில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆஸ்திரேலியாவின் முதல் டெஸ்ட் போட்டியின் போது உலக நம்பர் 1 டெஸ்ட் பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித், விரைவில் வெளியேறியதற்காக 3 கி.மீ தூரம் ஓடினார்.

கப்பாவில் கடந்த 24ம் தேதியன்று நடந்த முதலாவது டெஸ்டில் அரியதொரு  பேட்டிங் தோல்விக்கு பின்னர் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்மித், அணி பேருந்தைத் தவறவிட்டு தன்னைத் தானே தண்டிக்கும் முயற்சியின் அடையாளமாக மைதானத்திலிருந்து அணி தங்கியிருந்த ஹோட்டலுக்கு 3 கி.மீ தூரம் திரும்பி ஓடினார்.

ஸ்டீவ் ஸ்மித், தான் 100 ரன்கள் அடிக்கும்போது  தனக்குத் தானே சாக்லேட் பார்களைத் தந்து உபசரித்துக் கொள்வதும் அதே சமயம்,  ஆட்டமிழக்கும்போதெல்லாம் அதற்கான தண்டனையையும் தானே எடுத்துக்கொள்வதையும் சுட்டிக்காட்டுகிறார்.

பிரிஸ்பேன் டெஸ்டில் ஸ்மித் 4 ரன்களுக்கு பாகிஸ்தான் லெக் ஸ்பின்னர் யாசிர் ஷாவிடம் ஆட்டமிழந்த போதும் ஆஸ்திரேலிய அணி, போட்டியை வெல்லக்கூடிய ஸ்கோரான 580 ஐ எட்டியது. டேவிட் வார்னர் மற்றும் மார்னஸ் லாபுசாக்னே ஆகியோரின் டாடி செஞ்சுரிகளுக்கு நன்றி.

இதற்கிடையில் ஸ்டீவ் ஸ்மித், யாசிர் ஷாவுக்கு எதிரான தனது சாதாரண ஆட்டம் குறித்து கவலைப்படவில்லை என்றும் இந்த நிகழ்வு அவருக்கு எதிராக இன்னும் கவனமாக இருப்பதற்கான கூடுதல் உந்துதலை அளித்துள்ளது என்றும் கூறினார்.