மனம் நெகிழ வைத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்!

சிட்னி

ஆஸ்திரேலியாவில் ஷூ பாலிஸ் போடுபவரின் கடைசி விருப்பத்தை நிறைவேற்றி மனம் நெகிழ வைத்துள்ளார் பிரபல கிரிக்கெட்வீர்ர் ஸ்டீவ்வா.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு தலைவராக இருந்தவர்  ஸ்டீவ்வா.  இவர் கிரிக்கெட் விளையாட மட்டுமல்ல தனது அறக்கட்டளை தொடர்பாகவும் பலமுறை இந்தியா வந்துள்ளார். இப்போது இவர் வாரணாசி வந்துள்ளார். ஸ்டீவ்வா – ன் மனிதாபிமானத்தை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது அவரது வருகை.

ஆஸ்திரேலியாவில் ,பிரைன் ருட் என்பவர் ஷூ க்களுக்கு பாலிஷ் போட்டு வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தார். சொந்த வீடு இல்லாத இவருக்கு வயது 58.  அவர், தான் உயிரிழந்தபிறகு தனது சாம்பலை இந்து முறைப்படி கங்கையில் கரைக்கவேண்டும் என  ஸ்டீவ் வா-இடம் அடிக்கடி சொல்லி வந்தாராம். இந்நிலையில், ப்ரைன் ருட், சில தினங்களுக்கு முன் திடீரன்று காலமானார்.

அப்போது ப்ரைன் ருடின் ஆசையை நிறைவேற்ற விரும்பிய  ஸ்டீவ்வா, ஆஸ்திரேலியாவிலிருந்து அவரது சாம்பலை கங்கை நதியில் கரைக்க  இந்தியா கொண்டு வந்தார். ப்ரைன்ருட் விரும்பியபடியே இந்து நம்பிக்கையின்படி சடங்குகள் செய்து அவரது சாம்பலை கங்கையில் கரைத்தார்.  ப்ரைன் ருடின் கடைசிவிருப்பத்தை நிறைவேற்றியதால் ஸ்டீவ் வா தற்போது மகிழ்ச்சியாக காணப்படுகிறார். ஸ்டீவ்வாவின் மனிதாபிமானத்தை நினைத்து பலர் மனம் நெகிழ்ந்து பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.