தனக்குக் கொலை மிரட்டல் விடுத்த பெண்ணிடமிருந்து பாதுகாப்பு கோரிய இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்…..!

சாரா சார் என்ற பெண்மணி தன்னைக் கடந்த சில மாதங்களாகப் பின் தொடர்வதாகவும், தன்னைக் கொலை செய்வதாக மிரட்டியுள்ளதகாவும் ஸ்பீல்பெர்க் புகார் அளித்துள்ளார். மேலும் அந்தப் பெண்மணி தன்னைக் கொலை செய்யத் துப்பாக்கி வாங்கியதாகவும் ஸ்பீல்பெர்க் கூறியுள்ளார்.

இதனால் ஸ்பீல்பெர்க்குக்கு பாதுகாப்பு அளிக்கும் வண்ணம் அவரை நெருங்கக் கூடாது என சாராவுக்குத் தடையாணையைப் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனால் ஸ்பீல்பெர்க் மற்றும் அவரது குடும்பத்தினரிடமிருந்து குறைந்தது 300 அடி தூரத்தில் சாரா இருந்தாக வேண்டும்.