உள்ளே நுழையாதே, இது தனிமைப்படுத்தப்பட்ட வீடு! ஸ்டிக்கர் ஒட்டும் சென்னை மாநகராட்சி

சென்னை:

 ‘உள்ளே நுழையாதே, இது கொரோனா வாரஸ் பாதிப்புடையவர்கள் இருப்பதால், தனிமைப் படுத்தப் பட்டவீடு’  என்று மற்றவர்களை எச்சரிக்கும் நோக்கில் வீடுகளில் பச்சைநிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ்,  பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கையாக வெளிநாடு சென்று வந்தவர்கள் என்பதை பிறர் அறியும் வகையில் வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில்  9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தமிழகத்திற்கு வெளிநாடுகளில் இருந்து 9ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு ஸ்கிரினிங் டெஸ்ட் எடுக்கப்பட்ட நிலையில், கொரோ தொற்று உறுதி செய்யப்படாத நிலையில், அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று அவர்களின் கைகளில் முத்திரை குத்தி அறிவுறுத்தப்பட்டு, அனைவருமே வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

ஆனால் சிலர், அரசின் எச்சரிக்கையை  வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதையடுத்து, அவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள தமிழக அரசு,  தனிமையில் இருப்பவர்களின் வீட்டை அடையாளப்படுத்தும் வகையில் அவரின் பெயர் , முகவரி , நம்பர் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு ஸ்டிக்கர் வீட்டு வாசலில் ஓட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த ஸ்டிக்கரில், உள்ளே நுழையாதே, தனிமைப்படுத்தப்பட்ட வீடு போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.

அருகே உள்ள வீட்டினரும், பொதுமக்களும் எச்சரிக்கையாக இருக்கும் வகையில், அமைந்துள்ள இந்த ஸ்டிக்கரை ஒட்டும் பணியை தீவிரப்படுத்தி உள்ளது சென்னை மாநகராட்சி.

சென்னையில் மட்டும்,  200 வார்டுகளில் உள்ள 3000 ஆயிரம் குடும்பங்கள் கொரோனா வைரஸ் கண்காணிப்பில் உள்ளதாகவும் மாநிலம் முழுவதும் 9,000 வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.