18 எம்எல்ஏக்களும் அமமுகவில்தான் உள்ளோம்: தங்கத்தமிழ் செல்வன்

சென்னை:

டிடிவி ஆதரவு 18 சட்டமன்ற உறுப்பினர்களும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில்தான் இருக்கிறோம் என்றும் டிடிவி தீவிர ஆதரவாளரான தங்கத்தமிழ் செல்வன் கூறி உள்ளார்.

எடப்பாடிக்கு எதிராக டிடிவிக்கு ஆதரவாக கவர்னரிடம் கடிதம் கொடுத்தால், சபாநாயகரால் அதிமுகவை சேர்ந்த 18 எம்எல்ஏக்கள்  தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்து தொடரப்பட்ட  வழக்கில் சென்னை உயர்நீதி மன்ற அமர்வு மாறுபட்ட தீர்ப்பு கூறிய நிலையில், 3வது நீதிபதியின் விசாரணைக்கு வழக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் டிடிவி தினகரனுடன்  ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தங்கத்தமிழ் செல்வன்,  நாங்கள்  18 எம்எல்ஏக்களும் ஓரணியில் உள்ளோம். ஒருவரை கூட எடப்பாடி பழனிச்சாமியால் இழுக்க முடியாது. யாரும் எடப்பாடி அணிக்கு செல்ல தயாரில்லை. 18 பேரில் ஒருவரை இழுத்தாலும் கூட நாங்கள் மொத்தமாக எடப்பாடி பக்கம் செல்ல தயார் என்று தெரிவித்தார்.

எங்களுக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையே எந்தவிதமான கருத்து வேறுபாடும் கிடையாது என்று தெரிவித்தனர்.

எங்களுக்குள்ளே பிளவுகளை ஏற்படுத்தும் விதத்தில்,  எடப்பாடி பழனிச்சாமி, ஜெயக்குமார் செய்திகளைத் திரித்து கூறுகின்றனர் என்றும்,  முடிஞ்சா எங்களில்  ஒருத்தரை இழுத்துடுங்க.. நாங்க மொத்த பேரும் வந்துர்றோம் என்றும்  தங்க தமிழ் செல்வன் சவால் விடுத்தார்.

மேலும், நீதிமன்ற தீர்ப்பில் நம்பிக்கை இல்லாததால் வழக்ககை  வாபஸ் பெறுகிறேன் என்றும், இது தனது தனிப்பட்ட விருப்பம்,  எஞ்சிய 17 எம்எல்ஏக்கள் வழக்கை சந்திப்பது அவரவர் விருப்பம் என்றும் தெரிவித்தார்.

எனது தொகுதி மக்களுக்கு பணியாற்ற எம்எல்ஏ வேண்டும் என்றும், எனவே எனது வழக்கை வாபஸ் பெறப் போகிறேன் என்றார்.