அரசியல் குறித்து முடிவு எடுக்கவில்லை: ரஜினி

சென்னை:

ரசியல் குறித்து முடிவு எடுக்கவில்லை என்று ரஜினி தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்துவரும், “காலா” படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் கலந்துகொண்டு சமீபத்தில் சென்னை திரும்பினார்.

திரும்பிய பின் அரசியல் பிரமுகர்கள் சிலரை சந்தித்தார். சமீபத்தில் விவாசாய சங்க பிரமுகர் அய்யாக்கண்ணு, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ஆகியோரையும் சந்தித்தார்.

அப்போது ரஜினியுன் அரசியல் பேசியதாக அர்ஜூன் சம்பத் தெரிவிக்க, ரஜினியோ அரசியல் பேசவில்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த நிலையல் காலா படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள நேற்று மும்பை கிளம்பினார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களின் சில கேள்விகளுக்கு பதில் அளித்தார்.  அப்போது ஒரு செய்தியாளர், “அரசியல் குறித்து பலரிடமும் கலந்தாலோசிப்பதாக தகவல்கள் வருகின்றன. ஆனால் அரசியல் குறித்து பேசவில்லை என்கிறீர்கள்.. ஏன்”  என்று கேட்டார்.

அதற்கு ரஜினிகாந்த், “நான் அப்படி சொல்லவில்லை. அரசியல் குறித்துதான் பேசிக்கொண்டிருக்கிறேன். ஆனால் இன்னும்  அரசியல் குறித்து முடிவெடுக்கவில்லை. முடிவெடுத்ததும் செய்தியாளர்களிடம் அறிவிப்பேன்” என்றார்.