இன்னும் பன்னீரே தமிழக முதல்வர்: சட்டப்பேரவை வலைதளத்தில் தகவல்!

--

சென்னை,

திமுகவில் ஏற்பட்ட உள்கட்சி மோதல்களை தொடர்ந்து ஓபிஎஸ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதையடுத்து நேற்று மாலை சசிகலா ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ளார். அவரது தலைமையில் 30 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.

ஆனால் இன்று மதியம் 12 மணி வரை தமிழக அரசின் சட்டமன்ற பேரவை வலைதளத்தில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் என்றே இருந்து வருகிறது. இது தமிழக சட்டமன்ற தகவல்கள் குறித்து இணைய தளத்தை பார்வையிடுபவர்களை குழப்பமடைய செய்கிறது.

நாளை சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியதிருப்பதால், சம்பந்தப்பட்டவர்கள்  பெரும்பான்மையை பார்த்துவிட்டு மாற்றலாம் என இருக்கிறார்களோ என்னவோ….