சென்னை:

நேற்று சென்னையில் காவிரி எதிர்ப்பு போராட்டத்தை மீறி ஐபிஎல் போட்டி நடைபெற்றது. அப்போது ஸ்டேடியத்திற்குள் புகுந்திருந்த போராட்டக்காரர்கள் சிலர் தங்களது ஷு மற்றும் செருப்பை தூக்கி வீசி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செருப்பை வீசியர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் சிஎஸ்கே வீரரான ரவிந்திர ஜடேஜா, செருப்பு வீச்சு குறித்து டுவிட்டு பதிவிட்டுள்ளார்.

அதில், எங்களுக்கு இன்னும் சிஎஸ்கே மீது அன்பும், கவனிப்பும்  இருக்கிறது என்று என்று கூறி உள்ளார்.

நேற்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும்போது,  மைதானத்துக்குள் காலணி வீசப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று பார்வையாளர்கள் மாடத்தில்  அமர்ந்திருந்த நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 8 பேர் காலணிகளை மைதானத்திற்குள் வீசி, கோஷம் எழுப்பினர். மேலும் நாம் தமிழர் கட்சிக் கொடியை உயர்த்திப் பிடித்து முழக்கமிட்ட நாம் தமிழர் கட்சியினரை அங்கிருந்து அப்புறப்படுத்தி கைது செய்தனர்.

இதையடுத்து போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இந்த நிகழ்வு உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.