பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கான ‘ஸ்டைபண்டு’ அதிரடி உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை:

மிழக மருத்துவக்கல்லூரிகளில் மருத்துவம் படித்து வரும், பயிற்சி மருத்துவ மாணவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான ஸ்டைபண்டு (stipend) எனப்படும்  மாதாந்திர ஊக்கத்தொகையை  அதிரடியாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

இந்த உயர்வு ஏப்ரல் 1ம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உள்ளிருப்பு பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் மாதாந்திர ஊக்கத் தொகை 13 ஆயிரம் ரூபாயில் இருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

முதுநிலை பட்ட முதல் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு 35 ஆயிரம் ரூபாயாகவும், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு 37,500 ரூபாயாகவும்,  மூன்றாம் ஆண்டு மாணவர் களுக்கு 40,000 ரூபாயாகவும் மாதாந்திர ஊக்கத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

உயர் சிறப்பு முதலாண்டு மருத்துவ மாணவர்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகை 40,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு 43,500 ரூபாயாகவும், மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கு 45,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

ஊக்கத்தொகையுடன், உள்ளிருப்புபயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 600 ரூபாய் உயர்த்தி வழங்கவும், அரசு மருத்துவரல்லாத முதுநிலை பட்டம், பட்டயம் மற்றும் உயர்சிறப்புமருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 1000 ரூபாய் உயர்த்தி வழங்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதனால் அரசுக்கு ஆண்டுதோறும் 44கோடியே17 லட்சம் ரூபாய்கூடுதல் செலவினம் ஏற்படும்  என்றும் அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி