பீகாரில் இரு கூட்டணிகளிலும் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல்..

பீகாரில் இரு கூட்டணிகளிலும் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல்..

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்து பா.ஜ.க.வுடன் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜனசக்தி கட்சி நேற்று பேச்சு நடத்தியது.

டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டாவின் இல்லத்தில் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜே.பி. நட்டா, லோக்ஜனசக்தி சார்பில் அந்த கட்சித் தலைவர் சிராக் பஸ்வான் ஆகியோர் பங்கேற்றனர்.

40 தொகுதிகள் கேட்டு சிராக் பிடிவாதமாக இருந்ததால், இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதுபோல் எதிர்க்கட்சி கூட்டணியிலும் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது.

எதிர்க்கட்சி கூட்டணிக்குத் தலைமை தாங்கும் லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி.கட்சி, தோழமை கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 60 இடங்கள் ஒதுக்கத் தயாராக உள்ளது.

ஆனால் 70 தொகுதிகள் வேண்டும் எனக் காங்கிரஸ் வலியுறுத்துவதால், அந்த கட்சிகளுக்கு இடையே உடன்பாடு ஏற்படவில்லை.

-பா.பாரதி.