பங்குச் சந்தை : மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 40754 ஐ எட்டி சாதனை

மும்பை

மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் அதிகரித்து சென்செக்ஸ் குறியீட்டு எண் 40754 ஐ அடைந்துள்ளது.

அமெரிக்கா சீனா இடையே வர்த்தகப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.  உலகெங்கும் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் பங்குச் சந்தையில் ஏறுமுகம் காணப்பட்டு வருகிறது.

குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ், பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்துள்ளன.  இன்று புதன்கிழமை மும்பை பங்கு வர்த்தகச் சதி தொடக்கியதில் இருந்து பங்குகள் விலை ஏறத் தொடங்கி உள்ளன.

மும்பை பங்கு வர்த்தகச் சந்தை குறியீட்டு எண் அதிகரித்து 40754 ஆக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதை போல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியின் புள்ளிகளும் உயர்ந்து 12.086 ஐ எட்டி உள்ளது.

கார்ட்டூன் கேலரி